Advertisment

9 மாத குழந்தை உயிரிழப்பு-தீபாவளிக்கு ஊர் திரும்பியபோது நிகழ்ந்த சோகம்

9-month-old child loss their live- Tragedy that happened while visiting town for Diwali

Advertisment

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தீபாவளி விடுமுறைக்காக காரில் சென்ற தம்பதியினர் விபத்தில் சிக்கிய நிலையில் ஒன்பது மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்தி நகர்ப் பகுதியைசேர்ந்தவர்தீபக் அழகப்பன். இவர் சென்னையில் தனியார் எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த தெய்வானை என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில் நேற்று இரவு மூவரும் காரில் சொந்த ஊரான சேலத்துக்குபுறப்பட்டனர்.

கார் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி பகுதியில்வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் இடதுபக்க தடுப்புச் சுவரின் மீது கார் மோதியது. இதில் கணவன் மனைவி இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் ஒன்பது மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்து சென்ற வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்காக சொந்த ஊருக்கு சென்றபோது நேர்ந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

diwali Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe