Advertisment

சேலத்தில் ஒரே நாளில் 20 ரவுடிகள் அதிரடி கைது!

s

சேலம் மாநகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குற்றப்பின்னணி உடையவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி, ஒரே நாளில் 55 பேர் கைது செய்யப்பட்டனர். மார்ச் 9ம் தேதி ஒரே நாளில் 62 ரவுடிகளும், ஜூலை 9ம் தேதியன்று 57 ரவுடிகளும், 10ம் தேதியன்று 39 ரவுடிகளும், 28ம் தேதி 16 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

அதன்பிறகு, மூன்று மாதங்களாக இதுபோன்ற நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கைது நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

அதையடுத்து, இன்று (நவம்பர் 16, 2018) காலை முதல் சேலம் மாநகரம் முழுவதும் ரவுடிகளைக் களையெடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் முழுவீச்சில் இறங்கினர்.

அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஜவஹர், பிரகாஷ், வீச்சுக்குமார் என்கிற குமார், பிரபு, கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வன், ஜீவா, மணி என்கிற பல்லு மணி, சேட்டு என்கிற தீனதயாளன், சுரேஷ், அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ஜாபர் அலி என்கிற புயல், அரிசிபாளையம் மணிகண்டன், சூரமங்கலம் அற்புதராஜ் உள்பட 20 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இவர்களில் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஜவஹர் மீது இரண்டு கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கு, ஆள்கடத்தல், வழிப்பறி உள்பட 18 வழக்குகளும், ரவுடி பிரகாஷ் மீது ஒரு கொலை வழக்கு, ஐந்து கொலை முயற்சி வழக்குகள், இரண்டு வழிப்பறி வழக்குகள் உள்பட 21 வழக்குகளும் உள்ளன.

மேலும், வீச்சுக்குமார் என்கிற குமார், ஜவஹர் ஆகியோர் ஏற்கனவே ஒரு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். பிரகாஷ் என்ற ரவுடி, இதற்குமுன்பு மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிச்சிப்பாளையம் தாமரைச்செல்வன் மீது ஒரு கொலை முயற்சி, இரண்டு வழிப்பறி வழக்குகள் உள்பட 13 வழக்குகளும், அஸ்தம்பட்டி புயல் என்கிற ஜாபர் அலி மீது ஒரு வழிப்பறி வழக்கு உள்பட 10 திருட்டு வழக்குகளும், அரிசிபாளையம் மணிகண்டன் மீது ஒரு கொலை வழக்கு, ஒரு திருட்டு வழக்கும், சூரமங்கலம் அற்புதராஜ் மீது கொலை, வழிப்பறி உள்பட 4 வழக்குகளும் உள்ளன.

போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளால் ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

sankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe