an

சேலத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு இன்று மாலை மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisment

திமுக தலைவர் கலைஞர் கடந்த 7ம் தேதி மாலை உடல்நலமின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தொடர்ந்து பல அமைப்புகள் அஞ்சலி செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் சேலத்தில் ஆகஸ்ட் 13, 2018 அன்று மாலை பழைய பஸ் நிலையம் அருகே, அண்ணா சிலை முன்பு வைக்கப்பட்ட கலைஞரின் உருப்படத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

Advertisment

ஏஜடியுசி சார்பில் விமலன், முனுசாமி, மோகன், தொமுச சார்பில் பழனியப்பன், டேவிட், சிஐடியு சார்பில் தியாகராஜன், வெங்கடபதி, கோவிந்தன், ஹெச்எம்எஸ் சார்பில் கணேசன், சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

''கலைஞரின் மரணம், ஒட்டுமொத்த இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கே பேரிழப்பு ஆகும்,'' என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கலைஞருக்கு புகழாரம் சூட்டினர்.