/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem-art.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மல்லேஷ் (வயது32). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் பிழைப்புக்காக சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். அதே செங்கல் சூளையில் ஈரோட்டை சேர்ந்த சக்திவேல் - கலைவாணி தம்பதியினர் தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் தங்கி வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மல்லேஷுக்கும்கலைவாணிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. மேலும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த மாதம் கலைவாணி தனது ஒரு வயது குழந்தையுடன் மல்லேஷுடன் சேர்ந்து வாழ செங்கல் சூளையில் இருந்து சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து மல்லேஷ் - கலைவாணி இருவரும் தங்களை கணவன், மனைவி என்று கூறி ஓமலூர் அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்து பணி செய்து வந்துள்ளனர். இதனிடையே மற்றவரின் குழந்தையை என்னால் பார்த்துக்கொள்ள முடியாது என்று கூறி கலைவாணியிடம் மல்லேஷ் தகராறு செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் இருவரும் சம்பவத்தன்று சேர்ந்து மது அருந்திவிட்டு தனிமையில் இருந்துள்ளனர். அப்போது குழந்தை அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அழுத குழந்தையை தூக்கி சுவரில் அடித்துள்ளனர். மறுநாள் காலையில் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் படுகாயமடைந்த குழந்தையை உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இருவரையும் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)