Salem Teen jailed for 12 years

கிருஷ்ணகிரி அருகே, சிறுமியை கடத்திச்சென்று பாலியல்வன்கொடுமைசெய்த வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசஹள்ளி சோம்புறாகேட்டைச் சேர்ந்தவர் முனிசாமியப்பா. இவருடைய மகன் எல்லப்பா (21). இவர், கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம், பெலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல்வன்கொடுமைசெய்தார்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் சசிகலா வழக்குப்பதிவு செய்து, எல்லப்பாவை கைது செய்தார். அவர் மீது சிறுமி கடத்தல் மற்றும் போக்சோ சிறப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்த வழக்கின் விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜன. 29ம் தேதி தீர்ப்பு அளித்தார். அதில், எல்லப்பாவிற்கு பாலியல் பலாத்கார குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், கடத்தல் குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜராகி வாதாடினார்.