ADVERTISEMENT

திருமணம் முடிந்த கையோடு கழுத்தில் மாலையுடன் புதுமணத் தம்பதிகள் ஹெல்மெட் விழிப்புணர்வு பயணம்! 

01:06 AM Jun 14, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்தவர் கீர்த்திராஜ். எம்பிஏ பட்டதாரி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான தனசிரியாவுக்கும் வியாழக்கிழமை (ஜூன் 13, 2019) சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.

ADVERTISEMENT


புதுமண தம்பதியினர் திருமணக்கோலத்தில், கழுத்தில் மாலை அணிந்தபடியே ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர்.


சேலம் மாநகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 3 கி.மீ. தூரம் இவ்வாறு நூதன முறையில் விழிப்புணர்வு பயணத்தில் ஈடுபட்டனர். விழிப்புணர்வு ஊர்வலம் முடிந்த பின்னர் மண்டபத்திற்கு திரும்பிய மணமக்களை உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.


இதுகுறித்து புதுமணப்பெண் தனசிரியா கூறுகையில், ''ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு வகையில் வி-ழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமலேயே செல்கின்றனர்.


இதனால் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதோடு, அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பமும் கடும் துயரம் அடைகிறது. எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு பரப்புரை செய்ய நாங்கள் முன்பே முடிவு செய்திருந்தோம்.


அதன்படி, திருமணத்தை முடித்த கையோடு ஹெல்மெட் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டோம். எங்களை வாகன ஓட்டிகள் பார்க்கும்போது ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை அவர்களும் புரிந்து கொள்வார்கள். இதனால்தான் நூதன விழிப்புணர்வு பயணத்தில் ஈடுபட்டோம். இந்தப் பயணத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்,'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT