சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

Advertisment

salem steel plant related question ask with tr balu mp and answer union minister lok sabha

சேலம் உருக்காலை குறித்து மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு எழுப்பிய கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ஸ்டீல் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 2016- ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி சேலம் உருக்காலையின் 100% பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் உலகளாவிய நிறுவனங்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. மேலும் தனியார் துறையிடம் கிடைக்கும் முதலீடு, தொழில்நுட்பம் அதிகப்படுத்தினால் வேலை வாய்ப்பு உருவாகும். சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகரித்து தமிழகத்தின் திறன், வளர்ச்சி மேம்படும் என்று தெரிவித்தார்.

Advertisment