சேலத்தை அடுத்த கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கோபால்(50). அம்மாபேட்டையில் கோழிக்கடை வைத்துள்ளார். மார்ச் 5ம் தேதியன்று, மனைவி மற்றும் மகனுடன் திருநாகேஸ்வரத்திற்குச் சென்றிருந்தார்.

Advertisment

கோயிலுக்குச் சென்றுவிட்டு 7ம் தேதி காலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் கோபால். வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 19 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

Advertisment

salem shop owner home incident police investigation

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதுகுறித்து கோபால், காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். பீரோவில் பதிவாகியிருந்த விரல் ரேகை உள்ளிட்ட தடயங்களை விரல் ரேகை பிரிவு காவல்துறையினர் பதிவு செய்தனர்.

Advertisment

இரண்டு நாள்களாக வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட நபர்கள்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் வீடு, கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து, மர்ம நபர்களின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.