சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பண்ணப்பட்டியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் ஒன்றில், ரூபாய் 200க்கு பதில் ரூபாய் 500 வந்ததால் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு பணம் எடுத்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த வங்கி அதிகாரிகள், பணம் மாறி வந்த ஏடிஎம் மையத்துக்கு பூட்டு போட்டனர். ரூபாய் 200 வைக்க வேண்டிய ரேக்கில் ரூபாய் 500 வைக்கப்பட்டதே கோளாறுக்கு காரணம் என வங்கி அதிகாரிகள் கூறினர். மேலும் ரேக் மாறி பணத்தை வைத்த தனியார் நிறுவனமே பண இழப்புக்கு பொறுப்பு என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.