/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/san-ps-art.jpg)
சேலம் மாவட்டம் சங்ககிரியில் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் காவல் நிலைய வளாகத்தில் இன்று (27.12.2023) மாலை 5 மணியளவில் பழைய பொருட்களை எரித்துள்ளனர். அப்போது மர்மப் பொருள் ஒன்று வெடித்துள்ளது. இதனால் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பறையின் மேற்கூரைசேதமடைந்துள்ளது. அப்போது மேற்கூரையின் தகரம் சிதறி நியாமத்துல்லா (வயது 47) என்பவர் மீதும், பரத் என்பவர் மீதும் விழுந்துள்ளது. இதில் நியாமத்துல்லா சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த பரத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் நடந்த இடத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதே சமயம் காவல் நிலையத்திற்கு மர்மப் பொருள் எவ்வாறு வந்தது. இதனை யார் கொண்டு வந்தது எனப் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். காவல் நிலைய வளாகத்தில் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும்ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)