சேலத்தில் போலீஸ் எஸ்ஐ பணியிடை நீக்கம்!

சேலத்தில் பெண்ணிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சேலம் வீராணம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கலைசெல்வன். கடந்த சில மாதங்களுக்கு முன் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

salem police sub inspector suspend in commissioner ordr

அப்போது, ஒரு பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்ததாகவும், அவருடைய கணவரை தாக்கியதாகவும் புகார் எழுந்தது. அதையடுத்து அவர், வீராணம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு, மீண்டும் அந்தப் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பெண்ணின் மகள், உறவினர் ஒருவரையும் தாக்கியுள்ளார். இது தொடர்பாகவும் அவர் மீது அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய அன்னதானப்பட்டி காவல்துறையினர் அதுகுறித்த அறிக்கையை மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து கலைசெல்வனை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

police Salem sub Inspector suspended Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe