Salem police registered pocso case youngster

Advertisment

ஆத்தூர் அருகே, பிளஸ் 2 மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம், தா.மாண்டூரைச் சேர்ந்த வின்னரசு என்ற வாலிபர் பிரமிளாவை ஒருதலையாக காதலித்து வந்தார். இருவரும் அண்ணன், தங்கை உறவுமுறை ஆவதால் இந்த காதலுக்கு பிரமிளா மறுத்துள்ளார். உறவினர்களும் வின்னரசுவை எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், புதன்கிழமை (மே 4) காலை மாணவி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற வின்னரசு, அவரை முட்டல் அருவிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தன்னை காதலிக்கும்படி வற்புறுத்திய வின்னரசு, மாணவியிடம் தவறான முறையிலும் நடக்க முயற்சித்துள்ளார். அவரிடம் இருந்து தப்பித்த சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கண்ணீருடன் கூறினார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisment

அதன்பேரில் வின்னரசு மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தலைமறைவாகிவிட்ட வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.