சேலத்தில், குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Advertisment

p

சேலம் மாவட்டம் ஓமலூர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அம்சவள்ளி. காவலர் பாலாஜி என்பவர் இவருடைய ஜீப்பின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த 7ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு, ஆய்வாளர் அம்சவள்ளி பணி முடிந்து ராசிபுரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்குச் செல்ல ஜீப்பில் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து அவர் சொந்த ஊருக்கு பேருந்தில் சென்று விட்டார்.

Advertisment

ஆய்வாளரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு, அந்த ஜீப்பை காவலர் பாலாஜி ஓட்டிச்சென்றார். செல்லும் வ-ழியில் அவர் மதுபானம் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு போதை தலைக்கேறியது. போதை ஏறிய நிலையிலேயே ஜீப்பை ஓட்டிச்சென்ற அவர், சேலம் முள்ளுவாடி கேட் தொங்கும் பூங்கா அருகே வந்தபோது வாகனம் அவருடைய கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரத்தில் இருந்த ஒரு கட்டடத்தின் மீது வாகனம் மோதி நின்றது.

p

போதை மயக்கத்தில் இருந்த பாலாஜியால் ஜீப்பை பின்னோக்கி எடுக்க முடியாமல் மயங்கிக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல்துறையினர், வாகனத்தை அப்புறப்படுத்தியதோடு, பாலாஜியோ உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment

இதையடுத்து பணி நேரத்தில் மது குடித்துவிட்டு அலட்சியமாக இருந்ததாக அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்பி தீபா கணிகர் உத்தரவிட்டார். காவலர் பாலாஜிபோல் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கவோ, பணி நேரத்தில் விதிகளை மீறி அலட்சியமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.