Skip to main content

அங்கன்வாடி ஊழியர்களிடம் லஞ்ச வேட்டை; பெண் அதிகாரி சிக்கினார்!

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

 


சேலத்தில், அங்கன்வாடி ஊழியர்களிடம் லஞ்சம் வசூலித்த பெண் அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலராக பாலாம்பிகை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் அங்கன்வாடி பணியாளர்களிடம் மாதந்தோறும் லஞ்சம் வசூலித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் கிளம்பின.

 

p


காய்கறி, அரிசி கொள்முதல் செய்த வகையில் ஒவ்வொரு அங்கன்வாடி மையமும் தலா 500 ரூபாயும், அங்கன்வாடி மையத்திற்கு வாடகை செலுத்திய கணக்கில் இருந்து 1000 ரூபாயும் பாலாம்பிகையிடம் கொடுத்து வந்தனர். இதற்காக அவர் போலி கணக்குகளை எழுதுமாறும் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளார்.


ஆனாலும், கூடுதல் மாமூல் கேட்டு பணியாளர்களை அவர் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், புதன்கிழமை (மார்ச் 13, 2019) இரவு நேரத்தில் சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பாலாம்பிகை அமர்ந்து கொண்டு, ஒவ்வொரு பணியாளரையும் அ-ழைத்து லஞ்சம் வசூலித்து வருவதாக, சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.


இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த மையத்தில் இருந்து கணக்கில் வராத 50400 ரூபாய் இருந்தது. அத்தொகையை கைப்பற்றிய காவல்துறையினர், அதுகுறித்து பாலாம்பிகையிடம் விசாரித்தனர். ஆனால் அவர் பதில் ஏதும் கூறாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மவுனமாகவே இருந்தார். 


அங்கன்வாடி ஊழியர்களான நூர்ஜஹான், சாந்தி ஆகிய இருவரும்தான் பாலாம்பிகைக்கு லஞ்சம் வசூலித்துக் கொடுக்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பாலம்பிகையுடன் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் காவல் ஆணையர் பணியிட மாற்றம் 

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

Salem Police Commissioner Transfer

 

சேலம் காவல் ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதியதாக ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா ஆவடி காவல் ஆணையத்திற்கு கூடுதல் காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் இணை ஆணையராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சேலம் மாவட்டத்தின் புதிய காவல் ஆணையராக விஜயகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

Next Story

ஏழு டன் வெள்ளை கற்கள் சட்ட விரோத கடத்தல்

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

 

Illegal Trafficking; 7 tons of white stones, truck seized!


சேலம் அருகே, சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 7 டன் வெள்ளைக்கற்களை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

சேலம் அருகே உள்ள கருப்பூர் உப்பு கிணறு, ஊற்றோடை பகுதிகளில் இருந்து வெள்ளைக்கற்கள் கடத்திச் செல்லப்படுவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கனிமவளத்துறை உதவி இயக்குநர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 

 

உப்புகிணறு பகுதி வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியில் 7 டன் வெள்ளைக்கற்கள் சட்ட விரோதமாக கடத்திச் செல்வது தெரிய வந்தது. உடனடியாக வெள்ளைக் கற்களையும், லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

 

பறிமுதல் செய்யப்பட்ட லாரி, வெள்ளைக்கற்களை கருப்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர் ஓமலூரைச் சேர்ந்த பெருமாள் (வயது 44) என்பதும், அவர் வெள்ளைக்கற்களை சட்ட விரோதமாக வெட்டி எடுத்துச் சென்று மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.