salem panamarathupatti jalluthupatti cannabis plantation incident 

சேலம் மாவட்டத்தில் கஞ்சா செடியை பயிரிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள ஜல்லுத்துப்பட்டி மலை கிராம பகுதியில் கஞ்சா செடிபயிரிடப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பனமரத்துப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேல் தலைமையில் காவலர்கள், ஜல்லுத்துப்பட்டி அருகே உள்ள மஞ்சப்பள்ளியில்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமார் (வயது 48) என்பவர் தன் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு இருந்தது தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக கஞ்சா செடிகளை வேரோடு பறிமுதல் செய்ததுடன், குமாரையும் கைது செய்தனர். கஞ்சா செடியை பயிரிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.