/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/omni van43434.jpg)
சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியைச் சேர்ந்த சத்யராஜ், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஆம்னி வேனில், ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடைவிழாவைக் காண சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, ஆம்னி வேன் அஸ்தம்பட்டியைக் கடந்து மாவட்ட ஆட்சியர் மாளிகை அருகே சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென வாகனத்தில் இருந்து புகை கிளம்பியது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட சத்யராஜ், வாகனத்தை சாலை ஓரத்திலேயே நிறுத்தினார். உடனடியாக இரண்டு குழந்தைகள் உள்பட ஆறு பேர் கீழே இறங்கியுள்ளனர். அடுத்த சில நொடிகளில் வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us