Advertisment

திருச்சி மேயருக்கு சேலம் வடக்கு எம்.எல்.ஏ. வழங்கிய செங்கோல்! 

Salem North MLA to Trichy Mayor Scepter provided!

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி மாமன்ற கூட்ட மண்டபத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சியை மேம்படுத்துவதற்கு தேவையான 40 கோடி மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5 வார்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

இந்த வார்டு குழு ஜெகதாகபுரம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை வளாகப் பகுதியில் கட்டுவதற்கு உரிய தொகையை அரசிடமிருந்து பெறுவதற்கு கருத்துரு அனுப்புவது தொடர்பாக பேசப்பட்டது.

Advertisment

இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர்‌ மேயருக்கு செங்கோல் வழங்கினார்.

திருச்சி நகராட்சியானது 1994 ஆண்டு மாநகராட்சியாக உயர்த்தப்பட்டதில் இருந்து மேயருக்கு செங்கோல் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜராஜேந்திரன் 4 கிலோ எடைக்கொண்ட வெள்ளியிலான செங்கோல் நன்கொடையாக திருச்சி மாநகராட்சி மேயருக்கு வழங்கினார். இந்த செங்கோலை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மூலம் இன்று மேயர் அன்பழகனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

mayor trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe