salem mettur dam water level

Advertisment

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நீர்மட்டம் 307 நாளுக்குப் பிறகு 100 அடிக்குக் கீழே சரிந்து 99.64 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 64.37 டி.எம்.சியாக இருக்கிறது.

டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் குறைந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,002 கனஅடியில் இருந்து 2,210 கனஅடியாக அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் பட்சத்தில் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.

2005- 2006 ஆம் ஆண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 427 நாட்களாக 100 அடியில் நீடித்ததே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.