Advertisment

மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். மேட்டூர் அணையின் நீர் திறப்பு மூலம் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி மற்றும் குளங்களில் நீர் நிரப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

METTUR

வழக்காக மேட்டூர் அணை திறக்கும் நாளான ஜூன் 12- ஆம் தேதி, அணையின் போதிய அளவு நீர் இல்லாததால் அணை திறக்கவில்லை. தற்போதுஅணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கியதாலும் நாளை மேட்டூர் அணை திறக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணை திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TN CM EDAPPADI PALANISAMY ceremony OEPN Mettur Dam Salem Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe