சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து மக்களுக்காக திறக்கப்படும் குடிநீர் 2000 கன அடியாக அதிகரிப்பு. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 41.46 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 12.85 டி.எம்.சி ஆக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 232 கன அடியாக உள்ளது.சேலம் மாவட்டத்தில் சுற்று வட்டாரபகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது