/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/art-img-police-siren_11.jpg)
சேலம் அருகே உள்ள மல்லூர் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 29). இவர், சங்ககிரியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் வேலைக்குச் சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை சந்தியூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரின் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் புறநகர் டிஎஸ்பி தையல்நாயகி, மல்லூர் காவல் ஆய்வாளர் அம்சவள்ளி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று சடலத்தைக்கைப்பற்றிஉடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெங்கடேஷ், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தைக் கிணற்றில் வீசிச் சென்றனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. அவருடைய செல்போனில் கடந்த ஒரு வாரமாக பதிவான அழைப்புகளைச் சேகரித்து விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow Us