Advertisment

சிறுமியின் உறவினர்கள் புகார்... அத்தை மகன் கைது!

salem

சேலம் அருகே, எட்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சிறுமியின் அத்தை மகனைக் காவல்துறையினர்கைது செய்தனர்.

Advertisment

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஏர்வாடியைச் சேர்ந்தவர் வதனா (வயது 13, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிறுமியின் பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் அதே பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி, 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.

Advertisment

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மே 10) தனது தாத்தாவிடம், அத்தை மகனான திருமலை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகச் சிறுமி புகார் கூறினார்.

இதுகுறித்து உறவினர்கள் திருமலையிடம் விசாரித்தனர். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான திருமலை, கடந்த ஒரு மாதமாகச் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் மல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரித்த ஆய்வாளர் அம்சவள்ளி (பொறுப்பு), திருமலை மீது போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் அவரை சேலம் மத்தியச் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

கைதான திருமலையின் மகள், பாதிக்கப்பட்ட சிறுயுடன்தான் ஒரே பள்ளியில் படித்து வருகிறார். மகளைப் போல பாவிக்க வேண்டிய சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

relatives Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe