Advertisment

சேலம் அருகே சிறுமிக்கு வன்கொடுமை-புதுமாப்பிள்ளை கைது!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பூமணியூரைச் சேர்ந்தவர் ஜெகன் (23). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். ஒரு பெண்ணை காதலித்து வந்த அவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisment

salem incident

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் ஜெகன் மீது மார்ச் 10ம் தேதி, 17 வயது சிறுமி ஒருவர் சங்ககிரி மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், ''இரு மாதத்திற்கு முன்பு, நான் வீட்டில் தனியாக இருந்தபோது என்னை கட்டாயப்படுத்தி ஜெகன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டினார்.

Advertisment

இந்நிலையில், எனக்கு திடீரென்று வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது. சந்தேகம் அடைந்த எனது தாய், என்னை மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவப் பரிசோதனையில், நான் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. என்னை பாலியல் பலாத்காரம் செய்த ஜெகன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்,''

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், புதுமாப்பிள்ளை ஜெகனை போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

arrest police Salem Sexual Abuse
இதையும் படியுங்கள்
Subscribe