Advertisment

சேலம்: ஆண் நண்பருடன் 'ஒன்றாக' இருந்ததை பார்த்த கணவனை கொல்ல முயற்சித்த மனைவி; ஆண் நண்பரும் சிக்கினார்!

சேலம் அரிசிபாளையம் தம்மண்ணன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை (52). ஆட்டோ ஓட்டுநர். இவருடைய மனைவி பானு (44). இவர், அரிசிபாளையம் ரத்தினசாமிபுரத்தைச் சேர்ந்த சங்கர் (34) என்ற இளைஞருடன் பானு, 'நெருங்கி பழகி' வந்தார். இதையறிந்த அண்ணாத்துரை, மனைவியை கண்டித்தார்.

Advertisment

இந்நிலையில், திங்கள்கிழமை (பிப். 3) காலையில் வெளியே சென்றிருந்த அண்ணாத்துரை, வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டிற்குள் பானுவும், அவருடைய ஆண் நண்பர் சங்கரும் படுக்கை அறையில், 'ஒன்றாக' இருந்ததை பார்த்து அண்ணாத்துரை ஆத்திரம் அடைந்தார்.

Advertisment

salem husband and wife police investigation

இதனால் அவர்களுக்குள் கடும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பானுவும், அவருடைய ஆண் நண்பரும் அண்ணாத்துரையை தலையணையால் அமுக்கிக் கொலை செய்ய முயன்றனர். ஆனால் அவர் திமிறிக்கொண்டு கூச்சல் போட்டதால், பதற்றம் அடைந்த சங்கர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

இதுகுறித்து அண்ணாத்துரை அளித்த புகாரின்பேரில், செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் பானுவையும், அவருடைய ஆண் நண்பர் சங்கரையும் கைது செய்தனர். காவல் ஆய்வாளர் சுந்தராம்பாள் விசாரணை நடத்தி வருகிறார்.

husband Police investigation Salem wife
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe