salem homeopathy doctor incident court action taken 

மருத்துவரிடம்வழிப்பறிசெய்தஇருவருக்கு 7ஆண்டுகள்சிறைத்தண்டனைவழங்கிநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisment

சேலம்அம்மாபேட்டைஇந்திராகாந்திநகரைச்சேர்ந்தவர்சேகர்(வயது 50). இவர் ஹோமியோபதி மருத்துவர் ஆவார். கடந்த 2015ம்ஆண்டுஜூன் மாதம்17ம் தேதி, இருசக்கர வாகனத்தில்மாசிநாயக்கன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோதுஅந்த வழியாக வந்த தாதம்பட்டியைச் சேர்ந்த செல்வம்(வயது 34),ரவிக்குமார் (வயது 29) ஆகியோர் அவரை வழிமறித்துகத்தியைக் காட்டிமிரட்டி, சேகரிடம்இருந்த2500 ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

Advertisment

இதுகுறித்துஅம்மாபேட்டைபோலீசார் வழக்குப்பதிவுசெய்துஇருவரையும்கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்குசேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இருதரப்பு விசாரணையும் முடிந்த நிலையில் வழக்கில்ஜனவரி 10ம்தேதிதீர்ப்பு அளிக்கப்பட்டது. ஹோமியோபதி மருத்துவரை மிரட்டி பணம் பறித்தகுற்றத்திற்காக செல்வம்,ரவிக்குமார் ஆகியஇருவருக்கும் தலா7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்ஆயிரம் ரூபாய்அபராதமும் விதித்துநீதிபதிகிறிஸ்டல்பபிதாதீர்ப்புஅளித்தார்.