Advertisment

சேலம் ஜி.ஹெச். உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் 9 உணவகங்களில் திங்கள்கிழமை (அக். 21) உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் உத்தரவின்பேரில், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி, ஆரோக்யபிரபு, சிவலிங்கம் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர்.

Advertisment

தனியார் உணவகங்களைக் காட்டிலும், பயிற்சி மருத்துவர்களுக்காக அரசு மருத்துவமனை ஏற்று நடத்தி வரும் உணவகம், போதிய சுகாதாரமின்றி இருப்பது தெரிய வந்தது. சோதனை நடந்த 9 உணவகங்களில் 6 உணவகங்களுக்கு ஆய்வு அறிவிப்பு வழங்கவும், ஒரு உணவகத்திற்கு மேம்பாடு தாக்கீது அனுப்பவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Advertisment

salem govt hospital near restaurant and other shop food quality inspection in fssai officers

தக்காளி சோறு உள்ளிட்ட கலவை உணவுகளில் அளவுக்கு அதிகமாக செயற்கை நிறமூட்டிகள் கலப்பதும், செயற்கை சுவையூட்டிகள் கலப்பதும் தெரிய வந்தது. சில கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் இருப்பதும் தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அழுகிய பழங்களைக்கூட விற்பனைக்கு வைத்திருந்ததும், உணவகம் என்ற பெயரில் சானிட்டரி நாப்கின், பிளாஸ்டர் உள்ளிட்ட இதர பொருள்களையும் ஒரே கடையில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

salem govt hospital near restaurant and other shop food quality inspection in fssai officers

செயற்கை நிறமூட்டி, சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. அதன்படி, தக்காளி சோறு 25.56 கிலோ, இட்லி 17.250 கிலோ, அப்பளம் 3 கிலோ, கெட்டுப்போன பழங்கள் 3.60 கிலோ, ரொட்டி 8.80 கிலோ, கடலை மிட்டாய் 2.15 கிலோ, உணவுப்பொருள்களை பொட்டலம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த 12.75 கிலோ பழைய செய்தித்தாள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. 4.25 கிலோ நெகிழி பைகளும் அழிக்கப்பட்டன. உணவுப்பகுப்பாய்வுக்கூட பரிசோதனைக்காக தக்காளி சோறு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன.

food quality check inpsection fssai officers govt hospital Salem Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe