சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து!

Salem Government Hospital incident

சேலத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு என பல்வேறு மருத்துவத்துறைகளுடன் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திடீரென இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை பிரிவின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சையில் இருந்த நோயாளிகள் அனைவரும் அவசர அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீயை விரைந்து அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

hospital Salem
இதையும் படியுங்கள்
Subscribe