Advertisment

நாட்டுத் துப்பாக்கியைப் பதுக்கிய இளைஞர்; அதிரடியாகச் செயல்பட்ட போலீசார்

salem gangavalli  young man gun issue  

Advertisment

நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சீனி. இவருடைய மகன் சிவா (வயது22). இவர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக, இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பதாக கெங்கவல்லி காவல் நிலைய காவல் துறையினருக்குத்தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிவாவைப் பிடித்து விசாரித்தபோது, அவர் மீதான புகார் உண்மை என தெரியவந்தது. காவல் துறையினர் விசாரணைக்கு வருவதை அறிந்து,ஏற்கனவே அவர் எட்டிமடத்து கருப்பு சாமி கோயில் அருகே இரண்டு துப்பாக்கிகளையும் மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்ததோடு, சிவாவையும் கைது செய்தனர். இதையடுத்து சிவாவை, ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர் பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

gangavalli gun Salem
இதையும் படியுங்கள்
Subscribe