நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை! சேலம் அருகே பயங்கரம்!

salem farmer incident police investigation

சேலம் அருகே,நிலத்தகராறில்விவசாயியைப் பக்கத்து வீட்டுக்காரர்கள் அடித்துக் கொலை செய்தனர்.

சேலம் மாவட்டம்நங்கவள்ளிஅருகே உள்ளசின்னசோரகையைச்சேர்ந்தவர்பொன்னுவேல்(வயது 55). விவசாயி. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெருமாள் குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில ஆண்டாகநிலத்தகராறுஇருந்து வந்தது.

கடந்த ஏப்ரல் 3- ஆம் தேதி காலை,பொன்னுவேலிடம்பெருமாள் மற்றும் அவருடைய மனைவிநாகம்மாள், மகன் பார்த்திபன் ஆகியோர்நிலப்பிரச்னைதொடர்பாகதகராற்றில்ஈடுபட்டனர். அப்போது அவர்கள்பொன்னுவேலைசரமாரியாகத்தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தகவல் அறிந்தநங்கவள்ளிகாவல்நிலைய காவல்துறையினர், விசாரணை நடத்தி, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.பொன்னுவேலைஅடித்துக் கொல்லமுயன்றதாகபெருமாள்,நாகம்மாள், பார்த்திபன் ஆகிய 3பேரைக்கைது செய்தனர்.

இதற்கிடையே,பொன்னுவேலின்உடல்நிலைக் கவலைக்கிடமானதை அடுத்து, தனியார்மருத்துவமனையில் இருந்துமேல்சிகிச்சைக்காகசேலம் அரசு மருத்துவமனையில் ஜூன் 13- ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.அங்குதீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை, ஜூன் 14- ஆம் தேதி, காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றினர். இது ஒருபுறம் இருக்க, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெருமாள், நிபந்தனைஜாமினில்விடுதலைஆனதாகக்கூறப்படுகிறது.இதுகுறித்தும்காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Farmers incident police
இதையும் படியுங்கள்
Subscribe