ஈரோடு வளையகார வீதி, குப்பி பாலம் அருகே காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு பெண் உள்பட 3 பேரின் சடலங்கள் இரு நாட்களுக்கு முன்பு மிதந்து வந்தது.

Advertisment

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த பெண் தனது இரண்டு குழந்தைகளையும் துணியால் உடலில் கட்டியபடி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் இறந்தவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்ற விவரம் தெரியவில்லை.

m

இந்நிலையில் தற்போது தற்கொலை செய்து கொண்டவர்களின் அடையாளம் மற்றும் அவர்களை பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கள்ளக்குறிச்சி சாலையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி தமிழ்செல்வி 30 வயது இவர்களது மகள்கள் துர்காஸ்ரீ, தனுஸ்ரீ என்ற இருவர்.

Advertisment

மணிகண்டன் ஆத்தூரில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். தமிழ்செல்வியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ஆகும். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனும் தமிழ்ச்செல்வியும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்த போது காதலித்தனர் பிறகு திருமணம் செய்து கொண்டனர்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று கடந்த 26ஆம் தேதி மீண்டும் இருவருக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது இதனால் வெறுப்படைந்த தமிழ் செல்வி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு செல்வதற்தாக கூறிவிட்டு ஈரோடு வந்துள்ளார்.

ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் பஸ் நிறுத்தத்தில் தனது குழந்தைகளுடன் இறங்கிய அவர் பின்னர் அப்பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று மாலை தமிழ்ச்செல்வியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஈரோடு வந்து வந்தனர்.

அவர்களிடம் ஈரோடு டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவி குடும்ப தகறாறு காரணமாக ஏதுமறியாத அப்பாவி குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டாள் இளம் பெண் தமிழ்செல்வி. இந்த பரிதாபம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.