8 வழிச்சாலை திட்டத்திற்குஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இந்ததடைக்கு இடைக்காலத்தடைவிதிக்ககோருவதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.நீதிபதிஎன்.வி.ரமணாதலைமையிலான அமர்வு இந்த எட்டு வழிச்சாலை வழக்கை இன்று விசாரித்தது.

Advertisment

salem

விசாரணையின் போது மத்திய அரசு எட்டு வழிச்சாலையின் முக்கிய அம்சங்கள், பலன்கள், மக்கள் கூறிய கருத்துக்கள் கூடிய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில்தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே எட்டு வழிச்சாலை தொடர்பான பல்வேறு வழக்குகள், மனுக்கள்உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குகளை தொடர்ந்த விவசாயிகளுக்கு இந்த மனு தொடர்பான விவரங்கள் இன்னும் சென்று சேரவில்லை எனவே ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க இருக்கிறோம் எனக்கூறி இந்த வழக்கைஆகஸ்ட் 7 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.