Skip to main content

நாடக நடிகரை சுட்டுக்கொன்ற வாழப்பாடி தொழிலாளி கைது; நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்!

Published on 25/11/2018 | Edited on 25/11/2018


சேலம் அருகே, மான் வேட்டைக்குச் சென்றபோது நாட்டுத்துப்பாக்கியால் நாடக நடிகரை சுட்டுக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

 

s


சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கருமந்துறை கல்வராயன் மலையில் உள்ள கலக்கம்பாடியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் செல்வம் என்கிற செல்வராஜ் (45). தெருக்கூத்து கலைஞர். காளியம்மன் நாடக்குழு என்ற குழுவின் சார்பிலும் அடிக்கடி மேடை நாடகங்களில் நடித்து வந்துள்ளார்.


நேற்று முன்தினம் செல்வராஜ், அதே ஊரைச் சேர்ந்த பாண்டியன், பெரியசாமி, பூச்சி ஆகிய மூன்று பேருடன் மான், முயல், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக கல்வராயன் மலைப்பகுதிக்குள் சென்றார். அன்று இரவு, பெரியசாமியும், பூச்சியும் சேர்ந்து செல்வராஜை சடலமாக தூக்கிவந்து அவருடைய வீட்டில் ஒப்படைத்தனர். வேட்டைக்குச் சென்றிருந்தபோது, பாண்டியன் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி கைதவறி வெடித்ததில் செல்வராஜ் மீது குண்டுகள் பாய்ந்து இறந்துவிட்டதாகக் கூறினர். 


இதுகுறித்து வாழப்பாடி டிஎஸ்பி சூர்யமூர்த்தி, கரியகோயில் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். 


பிரேத பரிசோதனையில் செல்வராஜியின் முதுகு பகுதியில் பால்ரஸ் குண்டுகள் பாய்ந்திருப்பது தெரிய வந்தது. மேலும், கைதவறி குண்டுகள் பாயவில்லை என்பதும் அவரை சுட்டுக்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. 


இதையடுத்து பெரியசாமி, பூச்சி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம், காட்டுப்பன்றிக்கு பாண்டியன் குறி வைத்து சுட்டபோது, கைதவறி செல்வராஜ் மீது பாய்ந்து விட்டதாக கூறினர்.    இதனால் தலைமறைவான பாண்டியனை (55) போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இன்று (நவம்பர் 25, 2018) காலை அவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். 


பாண்டியனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.   கொல்லப்பட்ட செல்வராஜ், காளியம்மன் நாடகக் குழுவில் முக்கிய நடிகராக இருந்துள்ளார். அவருடன் அடிக்கடி பாண்டியனும் நடிக்கச் சென்றுள்ளார். அப்போது சில காரணங்களால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் செல்வராஜை திட்டமிட்டு பெரியசாமியும், பூச்சியும் மான் வேட்டைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். 


அங்கு நாட்டுத்துப்பாக்கியால் பாண்டியன் திட்டமிட்டே அவரை சுட்டுக்கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

''அந்த நேரத்தில் இவர்கள் ஆப் டவுசரில் விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள்''-கோவை செல்வராஜ் பேட்டி!

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

Coimbatore Selvaraj interview!

 

பண்ருட்டி ராமசந்திரன் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி கிடையாது என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் செல்வராஜ், ''பண்ருட்டி ராமசந்திரன் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல அவரோடு இருக்கும் யாருக்கும் தகுதி கிடையாது. அவர் அதிமுகவில் பணியாற்றிக்கொண்டிருந்த பொழுது இவர்களெல்லாம் ஆப் டவுசர் போட்டு கொண்டு விளையாடி கொண்டிருந்திருப்பார்கள். இவர்களுக்கு அரசியலே தெரியாது. அவர் செய்யும் அரசியல் என்ன இவர்கள் செய்யும் அரசியல் என்ன. அவர் எம்ஜிஆரோடு அரசியல் செய்தவர். அறிஞர் அண்ணா பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதை பார்த்து, 'முகத்தை காட்டினால் எம்ஜி.ராமச்சந்திரனுக்கு ஓட்டு, பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினால் மக்களின் ஓட்டு' என்று சொல்லி அன்னைக்கே இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். திமுகவில் 26 வயதில் எம்.எல்.ஏ ஆனார் 1967ல். அப்படிப்பட்ட இவரை பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது'' என்றார்.

 

Next Story

“இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு விற்பது மிக மிக மோசமான செயல்” -  நாகை எம்.பி. செல்வராசு

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

Selling an insurance company to a private company is a very, very bad thing Nagai MP Condemnation

 

மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை சேமிப்பைச் சேமித்து வைத்துக்கொள்ளும் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பது மிக மிக மோசமான செயல், ஆபத்தமான முடிவு என்கிறார் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு. மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள எல்ஐசி பங்கு விற்பனை மற்றும் எல்ஐசி சட்டத்திருத்தத்தை எதிர்த்தும், நாடாளுமன்றத்தில் அதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும் திருவாரூரில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசுவிடம் மனு  அளித்தனர். 

 

மனுவை பெற்றுக்கொண்டவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை எளிய மக்களை வஞ்சிப்பது மட்டுமல்லாமல் நிராகரிக்கும் செயலில் அமைந்துள்ளது. பொருளாதார நடவடிக்கையில் இந்த அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அந்நிய மூலதன நிறுவனத்தின் கட்டளையை நிறைவேற்றும் ஒரு கருவியாகவே செயல்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 74% அந்நிய மூலதனத்தைத் திணிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும், அதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது கோடான கோடி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

 

ரயில்வே துறை, ஏர் இந்தியா, ஐடிபிஐ வங்கி மட்டுமல்லாமல் மேலும் இரு வங்கிகளைத் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்திருக்கும் செயல் மோசமானது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை சேமிப்பைச் சேமித்து வைத்துக்கொள்ளும் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பது மிக மிக மோசமான செயல்," என்றார்.