Advertisment

பாஜகவால் நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்றுவிட்டது! திருச்சி சிவா 

சேலம் மக்களவை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து திருச்சி சிவா சேலத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9, 2019) பரப்புரை செய்தார். தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர், கன்னங்குறிச்சி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் பரப்புரைகளில் ஈடுபட்டார். அம்மாபேட்டையில், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் திருச்சி சிவா பேசியதாவது:

Advertisment

s

சேலம் மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர், கன்னங்குறிச்சி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக வேட்பாளர் எஸ்ஆர் பார்த்திபனை ஆதரித்து பேசினார். அவர் பேசுகையில், மக்களுக்காக உழைத்த கட்சி யார் என்று மக்கள்தான் உணர வேண்டும்.

Advertisment

தமிழகத்தில் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சிக்கு, தமிழக மக்களின் நிலைமை என்னவென்று தெரியாது. சரியான நபரை நீங்கள் ஆட்சியில் அமர்த்தினால்தான் அந்த அரசு உங்கள் பிரச்சனைக்கு தீர்வு தரும். இல்லையெனில் அந்த அரசே உங்களுக்கு பிரச்னையாக மாறிவிடும் எனவேதான் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல். இந்த தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் இந்தியாவின் வளர்ச்சி பின்னோக்கி செல்வதற்கு காரணமாக உள்ள மத்திய மாநில ஆட்சிகள் மாற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளதாகவும், முப்பது ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இடத்தில் ராணுவ வீரர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தது போன்றவைகள் தான் பாஜகவின் சாதனை என்று பேசிய அவர், தீவிரவாதத்தை கையாள தெரியாத நிலையில் பிரதமர் மோடி உள்ளார் என்று குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில் ஏழை எளிய மக்களின் நிலை அறிந்து செயல்பட்ட திமுக மீண்டும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருப்பதாகவும், இதனை பெற திமுக வெற்றி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஜெயலலிதா மறைவு வரை எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் யாருக்கும் தெரியாது. ஆனால் தற்போது அவருக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தவரையே அவர் தூக்கி எறிந்து விட்டார். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் மட்டுமே பணக்காரனும் ஏழையும் ஒன்றாகிறான் எனவே வாக்குச்சீட்டு விற்பனைக்கு அல்ல தூக்கி எறிவதற்கு. அது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பது என தெரிவித்தார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மோடி சாதித்ததுதான் என்ன. பொறியியல் படித்த மாணவர்கள் வேலை இன்றி பெட்டி கடையில் வேலை பார்க்கும் அவல நிலைதான் இங்குள்ளது. இந்நிலையில் கருப்பு பணத்தை மீட்காமல் மீண்டும் வாய்ப்பு கேட்கிறார் மோடி. திமுகவினர், ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய தவறியதை கூறியே வாக்குகளை கேட்கிறோமே தவிர யாரையும் தரகுறைவாக பேசி வாக்கு கேட்கவில்லை. ஆனால் முதல்வர் உள்பட அவர்களது கூட்டணி கட்சியினர் அவதூறாக பேசியே வாக்கு சேகரிக்கின்றனர் என்று குற்றம் சாட்டிய அவர், மக்களின் பிரச்சனைகள் நாடாளுமன்றத்தில் ஒலித்திட வரும் 18 ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் அனைவரும் திமுக வேட்பாளரை வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் சந்திரகுமார், சேலம் மத்திய மாவட்ட அவை தலைவர் கலையமுதன், கன்னங்குறிச்சி பேரூர் கழக செயலாளர் தமிழரசன், முன்னாள் தலைவர் பூபதி உள்ளிட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

trichy siva Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe