Advertisment

சேலத்தில் திமுக வேட்பாளர் நீதிமன்ற வளாகத்தில் வாக்குசேகரிப்பு!

சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன் இன்று (ஏப்ரல் 16) சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisment

s

மக்களவை தேர்தலையொட்டி இன்றுடன் பரப்புரைகள் முடிவு பெறுகின்றன. இதையொட்டி ஒவ்வொரு வேட்பாளரும் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் எஸ்.ஆர்.பார்த்திபன், இன்று காலை சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களிடம் திமுகவுக்கு வாக்களிக்கும்படி பரப்புரை செய்தார்.

Advertisment

திமுக தேர்தல் வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட துண்டு அறிக்கைகளை கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்களிடமும் வாக்கு வேட்டையாடினார்.

s

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கடந்த 20 நாள்களாக பரப்புரை மேற்கொண்டதில், மோடிக்கு எதிரான அலையும், தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவான அலையும் காணப்படுகிறது. வரும் தேர்தலில் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன். அதன் பின்னர் சேலம் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்,'' என்றார்.

salem dmk s.r.parthipan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe