/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/elephant 4563.jpg)
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள பெரிய தண்டா பச்சை பாலி ஓடை பகுதியில் 7 வயதுள்ள ஆண் யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாள்களாக எழுந்து நடக்க முடியாமல் ஒரே இடத்தில் படுத்துக் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர்.வட பர்கூர் வனப்பகுதியில் இருந்து அந்த யானை வந்திருக்கலாம் என்கிறார்கள் வனத்துறையினர். யானைக்கு குடல்புண் நோய் ஏற்பட்டதால் உணவு உண்ண முடியாமல் மெலிந்து போனதாகவும் கூறினர்.
மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ், கால்நடை மருத்துவர் ரங்கநாதன் மற்றும் வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு வட பர்கூர் வனப்பகுதியில் ஒரு யானை உடலில் காயத்துடன் இறந்து கிடந்தது. இந்நிலையில், நோய்வாய்ப்பட்ட யானை குறித்த தகவலால் இயற்கை ஆர்வலர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)