Advertisment

பெண்களை நிர்வாணப் படம் எடுத்து மிரட்டிய 3 பேர் கைது!

salem district womens beauty parlour owner police

Advertisment

சேலத்தில் ஏழைப் பெண்களைக் குறிவைத்து நிர்வாணப் படம் எடுத்து மிரட்டியதாக அழகுநிலைய உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் 4- வது தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (35). இவர், வீட்டிலேயே அழகுநிலையம் நடத்தி வருகிறார். அவரிடம் வேலைக்கு வந்த இரண்டு பெண்களை, தன் மனைவியுடன் இணைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அவர்களைப் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.

தன்னுடைய நண்பர்களின் பாலியல் இச்சைக்கும் அவர்களைக் கட்டாயப்படுத்தி உள்ளார். நாளுக்குநாள் லோகநாதனிடம் இருந்து தொல்லைகள் அதிகமானதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து சேலம் நகர அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து லோகநாதன், அவருடைய மனைவி ரூபா ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, லோகநாதனை கைது செய்தனர்.

Advertisment

இது ஒருபுறம் இருக்க, மேலும் இரண்டு பெண்கள் லோகநாதன் மற்றும் அவருடைய நண்பர்களான தாதகாப்பட்டி வசந்த நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்கிற சிவா (36), பங்களா தோட்டம் பராசக்தி நகரைச் சேர்ந்த அஜய் என்கிற பிரதீப் (28) ஆகியோர் மீது புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில் மேற்கூறிய மூவரும் தங்களை ஆபாசப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியதாகக் கூறியிருந்தனர். இதையடுத்து அந்த வழக்கிலும் லோகநாதன் மட்டுமின்றி அவருடைய கூட்டாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதேநேரம், லோகநாதனின் மனைவி ரூபா தலைமறைவாகி விட்டதை அடுத்து, அவரை தேடி வருகின்றனர். காவல்துறை விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

லோகநாதன் வீட்டில் அழகுநிலையம் நடத்தி வருவதாகக்கூறி, பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் செய்து வந்துள்ளார். வெளி உலகுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அழகுநிலையம் நடத்துவதாகக் கூறி வந்துள்ளார். விபச்சாரத்திற்கு இணங்காத பெண்களை மிரட்டி, அவர்களை நிர்வாணமாகப் படம் எடுத்து வைத்துக்கொண்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.

http://onelink.to/nknapp

குடும்ப கஷ்டத்தில் தவிக்கும் பெண்கள், கணவரைப் பிரிந்தமற்றும் கணவனை இழந்த இளம் பெண்களைக் குறிவைத்து லோகநாதனும் அவருடைய நண்பர்களும் நீண்ட காலமாகவே இவ்வாறு நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி வந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் அவர்களுடன் நிர்வாணமாக இருக்கும் காட்சிகளையும் ரகசியமாக வீடியோவில் பதிவு செய்துள்ள இவர்கள், மாநகரில் உள்ள சில பெரிய புள்ளிகளிடம் பணம் பறித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றத்திற்கு எல்லாம் லோகநாதனின் மனைவி ரூபா உடந்தையாக இருந்துள்ளார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் ஓமலூர் கிளைச்சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police Womens owner beauty parlours Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe