Advertisment

சிறுமியுடன் குடும்பம் நடத்திய பூ வியாபாரி போக்சோவில் கைது!! 

salem district women child incident police arrested and investigation

Advertisment

சேலத்தில், தனது கடைசி மகனுக்கே 17 வயது ஆகும் நிலையில், 13 வயது சிறுமியை கடத்திச் சென்று குடும்பம் நடத்தி வந்த பூ வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சேலத்தை அடுத்த வீராணம் அருகே உள்ள மோட்டூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 47). பூக்களை மொத்தமாக கொள்முதல் செய்து, மாலையாக கட்டி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி. இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகள், 19 மற்றும் 17 வயதில் இரு மகன்களும் உள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈஸ்வரன் திடீரென்று மாயமானார். அதே பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமியும் காணாமல் போனார். சிறுமியுடன் பூ வியாபாரி ஈஸ்வரன் அடிக்கடி பேசி வந்ததை சிறுமியின் பெற்றோர் பார்த்துள்ளனர்.

Advertisment

இதனால் மகளை அவர்தான் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று சந்தேகம் அடைந்த பெற்றோர், அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஈஸ்வரன் கொள்முதல் செய்து வரும் பூக்களை, மாலையாக கட்டிக்கொடுக்குமாறு மேற்படி சிறுமியின் தாயாரிடம் கொடுத்து வந்துள்ளார். அதனால் அடிக்கடி அவருடைய வீட்டுக்குச் சென்று வந்ததில், சிறுமியுடனும் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

கடந்த மாதமாக காவல்துறையினர், உறவினர்கள் ஆகியோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் இருவரும் வேலை செய்து வருவதாக அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, ஆய்வாளர் சிவகாமி தலைமையில் காவல்துறையினர் வளையப்பட்டிப்பட்டிக்கு விரைந்தனர்.

அங்கு கோழிப்பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த இருவரையும் அம்மாபேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தாங்கள் இருவரும் கணவன், மனைவி என்று பொய் சொல்லி கோழிப்பண்ணையில் வேலைக்குச் சேர்ந்திருப்பதும், ஒரே வீட்டில் இருவரும் தம்பதி சகிதமாக குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, சிறுமியை கடத்திச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஈஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமியை அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

சிறுமியை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அழைத்தும் அவர் செல்ல மறுத்துவிட்டார். தன்னை ஈஸ்வரன் கடத்திச்செல்லவில்லை என்று அவர் கூறினாலும் சிறுமி என்பதால் அவரை பாதிக்கப்பட்டவராகக் கருதி, ஈஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

.

children incident Salem
இதையும் படியுங்கள்
Subscribe