கரோனா இல்லாத மாவட்டமானது சேலம்...

Salem is the district without Corona

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 447 பேருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்குப் பிறகு கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500 க்கும் கீழ் இன்று குறைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பானது 10 ஆயிரத்தை நெருங்க இருக்கிறது. தற்போது தமிழகத்தில்கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 64 பேர் கரோனாவில்இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்ஆகினர்.இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,240 ஆக உள்ளது.

இந்நிலையில் சேலத்தில் கரோனாவால் பாதிப்படைந்த அனைவரும் குணமடைந்ததால் கரோனாபாதிப்பில்லாத மாவட்டம் ஆகிறது சேலம்.சேலத்தில்கரோனாவில் இருந்து குணமடைந்த எஞ்சிய 2 பேரும் நாளைடிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். இதனால் கரோனாபாதிப்பில்லாத மாவட்டம் என்றநிலையைஎட்டியுள்ளது சேலம்.

corona virus Salem
இதையும் படியுங்கள்
Subscribe