சேலம் மாவட்டத்தில் இருளப்பாளி கிராமத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் நடந்த விழாவில் ரூபாய் 565 கோடி மதிப்பிலான மேட்டூர்- சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Advertisment

விழாவில் முதல்வர் பழனிசாமி, "மேட்டூர்- சரபங்கா நீரேற்ற திட்டம் 11 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றும் எங்கள் அரசு இல்லை. கிராம பொருளாதாரம் செழிப்பதற்காக நீர் மேலாண்மை செயல்படுத்தப்படுகிறது.

Advertisment

salem district water project cm palanisamy speech

குடிமராமத்து திட்டங்கள் விவசாயிகள் மூலமே செயல்படுத்தப்படுகின்றன. குடிமராமத்து திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தவறாக பரப்புரை செய்கிறார். எந்த நிகழ்ச்சியிலும் கிடைக்காத மகிழ்ச்சி தற்போது கிடைத்துள்ளது. அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படுகின்றன. காவிரி நதியில் கதவணைகள் கட்டுவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பணை திட்டங்களுக்காக ரூபாய் 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் வாய்ச்சொல் வீரர்கள்; நாங்கள் செயல்வீரர்கள். வண்டியின் இரு சக்கரங்களை போல் அரசும், அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுவதால் எதிர்க்கட்சியினர் தடுமாற்றம" என்றார்.

Advertisment