சேலத்தில் இரண்டு இடங்களில் உடல் வெப்பநிலையை பொதுமக்கள் பரிசோதனை செய்து கொள்ள வசதியாக, கட்டணமில்லா தானியங்கி தெர்மல் ஸ்கேனர் உபகரணங்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து உள்ளது, மக்களிடம் வரவேற்பைபெற்றுள்ளது.

Advertisment

salem district temperature test

சேலம் மாநகர பகுதிகளில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.காய்கறி சந்தைகள், இறைச்சி கடைகள் என கூட்டம் கூடுவதற்கான வாய்ப்புள்ள கடைகளை முறைப்படுத்திய மாநகராட்சி நிர்வாகம், பொதுவெளியில் நடமாடுவோர் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், முக கவசம் இல்லாமல் வெளியே வந்தால் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டுப்பாடுகளை கறாராக அமல்படுத்தியது.

இதுபோன்ற அதிரடிகள் கொஞ்சம் அச்சுறுத்தும் வகையில் தெரிந்தாலும்கூட, பிரத்யேக முக கவசம் அல்லது கைக்குட்டை, துண்டு, துப்பட்டா என ஆண்களும், பெண்களும் ஏதேனும் ஒரு துணியை முக கவசமாக பயன்படுத்துவது இன்று சாத்தியமாகி இருக்கிறது. கடைகள் முன்பு, சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்காமல் போனாலும்கூட, வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்ததவறியதாக சம்மந்தப்பட்ட கடைகளை மூடி சீல் வைக்கும் அதிரடியிலும் இறங்கியது.

Advertisment

nakkheeran app

கிருமி தொற்றும் அபாயம் உள்ள இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது முதல் அபாயகரமான இடங்களை மூடி சீல் வைத்தது வரை தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, தற்போது சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற சுகாதார நிலையம் ஆகிய இரு இடங்களிலும் தானியங்கி வெப்ப கண்காணிப்பு கருவியை அமைத்திருக்கிறது மாநகராட்சி. இந்தியன் வங்கியின் சமூக பொறுப்புத் திட்டத்தின் மூலம் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இவ்விரு இடங்களிலும் நேரில் சென்று உடல் வெப்பநிலையை கண்டறிந்து கொள்ளலாம். ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக 20 பேர் வெப்பநிலையை அறிந்து கொள்ள முடியும். உடல் வெப்பநிலையை அறிந்து கொள்வதன் மூலம் காய்ச்சல் அறிகுறிகளை எளிதில் அறிந்து கொண்டு, அதற்கான சிகிச்சைகளை உடனடியாக பெற இந்த உபகரணம் பயன்படுகிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபனிடம் கேட்டபோது, ''தானியங்கி உடல்வெப்ப நிலை கண்டறியும் உபகரணத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள எந்தகட்டணமும் இல்லை. 10 நொடிகளில் உடல் வெப்பநிலையை அறிந்து கொள்ள முடியும். இதன்மூலம் காய்ச்சல் பாதிப்புகள் இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வரும்போது, ஊழியர் யாராவது ஒருவர் அதை கண்காணிப்பர்,'' என்றார்.