/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/grocery 4444.jpg)
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபடும் 2,111 தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்குஇரண்டாம் கட்டமாக மளிகைப் பொருள்கள் பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஜூலை 16) நடந்தது. ஆணையர் சதீஷ், மளிகைப் பொருள் பெட்டகங்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் 1,048 நிரந்தரத் தூய்மைப் பணியாளர்கள், 1,063 சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 2,111 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள், தினமும் வழக்கமான சுகாதாரப்பணிகளை மேற்கொள்வதோடு, கரோனா தொற்று நோய்த்தடுப்பு பணிகளிலும் இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்றனர். அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் முகக்கவசம், கையுறைகள், காலுறைகள், ஒளிரும் மேல் சட்டைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முழு ஊரடங்கு காலங்களில் தூய்மைப் பணியாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, பெரு நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்பு நிதியுதவிகளின் கீழ் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் முதல்கட்டமாக 42.22 லட்ச ரூபாய் மதிப்பில் 20 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டது.
தற்போது, இரண்டாம் கட்டமாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)