Skip to main content

சேலத்தில் ரேஷன் கடை விற்பனையாளர், எடையாளர் பணிக்கு ஆளெடுப்பு!

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

salem district ration shops workers

 

 

சேலத்தில், ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு டிச.14- ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

 

சேலம் மாவட்டத்தில் 1581 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் 132 விற்பனையாளர், 40 எடையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

 

விற்பனையாளர் பணிக்கு பிளஸ்-2, எடையாளர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. முடித்திருக்க வேண்டும். இவ்விரு பணியிடங்களுக்கும் கடந்த ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தமுள்ள 172 காலிப்பணியிடங்களுக்கு 11,920 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

 

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு அழைப்புக் கடிதம் விரைவில் அனுப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முகத்தேர்வு சேலம் சிஎஸ்ஐ பள்ளியில் வரும் டிச.14- ஆம் தேதி தொடங்கி, டிச.24- ஆம் தேதி வரை நடக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்