Skip to main content

சேலத்தில் இடி, மின்னலுடன் மழை... ஓரளவு வெப்பம் தணிந்தது!!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020


 

salem district rain peoples


சேலத்தில், வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மாலையில் திடீரென்று இடி, மின்னலுடன் மழை பெய்ததால், மாநகரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் தணிந்தது.
 


தமிழகத்தில், நடப்பு ஜூன் தொடக்கத்தில் இருந்தே தென்மேற்குப் பருவ மழையும் தொடங்கி விடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. சேலத்தைப் பொருத்தமட்டில், வழக்கமாக அக்கினி நட்சத்திர காலமே பலத்த மழையுடன்தான் தொடங்கும். கத்திரி வெயில் முடிவதற்குள் நாலைந்து முறையாவது மழை பெய்து விடும். இந்த ஆண்டு, அக்கினி நட்சத்திர காலக்கட்டத்தில் மழை பொய்த்தது.
 

salem district rain peoples


அதேநேரம், ஜூன் தொடங்கி நான்கு நாள்கள் ஆகியும் மாவட்டத்தில் பரவலாக லேசான மழை பெய்தாலும், மாநகரப் பகுதியில் தென்மேற்குப் பருவமழைக்கான அறிகுறிகள் இல்லாததோடு, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மாலை 05.15 மணியில் இருந்தே, சூரமங்கலம், 5 சாலை, திருவாக்கவுண்டனூர், கந்தம்பட்டி உள்ளிட்ட மாநகரின் சில பகுதிகளில் திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. 

 

சார்ந்த செய்திகள்