salem district omalur father and son incident

சேலம் அருகே, குடிபோதையில் வீட்டில்தகராறில்ஈடுபட்டு வந்ததந்தையைக்கல்லால் அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செல்லப்பிள்ளை குட்டை காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவருடைய மகன்விஷ்ணுகுமார்(வயது 24). மாரியப்பனுக்குமதுபழக்கம் இருந்து வந்தது. தினமும் மது போதையில் வீட்டுக்கு வரும் அவர் மனைவி, மகனிடம்தகராற்றில்ஈடுபட்டு வந்துள்ளார்.

Advertisment

ஜூன் 13- ஆம் தேதி வழக்கம்போல் மது போதையில் வீட்டுக்கு வந்த மாரியப்பன், மீண்டும் குடும்பத்தினருடன்தகராறில்ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்தவிஷ்ணுகுமார், தனதுதந்தையைக்கல்லால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் காவல்நிலைய காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி,கூராய்வுக்காகசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தந்தையைக்கொன்று விட்ட பயத்தில்,விஷ்ணுகுமார்தலைமறைவாகி விட்டார்.

Advertisment