சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டும், பிரசித்தி பெற்ற ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டும் சேலம் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 3- ஆம் தேதி அன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்த உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச்சட்டம் 1881- ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அன்றைய தினம் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். ஆகஸ்ட் 3- ஆம் தேதி, சனிக்கிழமை அரசு விடுமுறை தினமாக உள்ளதால், அதற்கு ஈடான பணி நாளாக வேறு நாளினை அறிவிக்க தேவை ஏற்படவில்லை என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.