சேலம் மாவட்டத்தில் இருளப்பாளி கிராமத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் நடந்த விழாவில் ரூபாய் 565 கோடி மதிப்பிலான மேட்டூர்- சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரிநீரை சரபங்கா வடி நிலப்பகுதியின் வறண்ட ஏரிகளுக்கு அனுப்ப இந்த நீரேற்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மேட்டூர் அணை உபரி நீர் மின்மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு 100 ஏரிகள், குளங்களுக்கு நீர் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய திட்டத்தால் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 வட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் தமிழக அரசின் மேட்டூர்- சரபங்கா நீரேற்ற திட்டத்தால் மக்களின் குடிநீர் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.