மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,031 கனஅடியிலிருந்து 10,396 கனஅடியாக அதிகரிப்பு.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.90 அடியாகவும், நீர் இருப்பு 89.61 டிஎம்சியாகவும் இருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 22,000 கனஅடி வரை காவிரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்காக சுமார் 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.