காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை இன்று (24/09/2019) மீண்டும் எட்டியுள்ளது. அதேபோல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,097 கன அடியிலிருந்து 15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/METTUR.jpg)
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்க்காக வினாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காகஅணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
Follow Us