சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,396 கனஅடியில் இருந்து 24,169 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக 22,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mettur-dam323-1565590929.jpg)
அதேபோல் மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 116.97 கனஅடியாகவும், அணையின் நீர் இருப்பு: 88.71 டிஎம்சியாகவும் இருக்கிறது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீரவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Follow Us