மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

salem district mettur dam water level

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

இன்று (29/11/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,013 கனஅடியில் இருந்து 6,976 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.55 அடியாகவும், நீர் இருப்பு 65.55 டி.எம்.சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு வினாடிக்கு 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இதனிடையே, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 7,000 கனஅடியாக குறைந்தது.

Mettur Dam salem district water level
இதையும் படியுங்கள்
Subscribe